’மௌக்லி 2025’ படத்தின் முதல் பாடல் ‘சயாரே’ வெளியீடு|Mowgli 2025 First Single ‘Sayyare’ is Heartfelt and Soulful

சென்னை,
இளம் ஹீரோ ரோஷன் கனகலா, பபிள்கம் படத்தின் வெற்றிகரமான அறிமுகத்திற்குப் பிறகு, தேசிய விருது பெற்ற கலர் போட்டோ புகழ் சந்தீப் ராஜ் இயக்கிய மௌக்லி 2025 படத்தில் நடித்துள்ளார். பீப்பிள் மீடியா பேக்டரியின் கீழ் டிஜி விஸ்வ பிரசாத் மற்றும் கிருத்தி பிரசாத் ஆகியோர் இப்படத்தை தயாரிக்கின்றனர்.
சமீபத்தில் வெளியான கிளிம்ப்ஸ் ஏற்கனவே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தநிலையில், இப்போது முதல் பாடலான ‘சயாரே’ வெளியாகி உள்ளது.
சாக்சி மடோல்கர் கதாநாயகியாக நடிக்கும் இப்படத்தில் பண்டி சரோஜ் குமார் வில்லனாகவும், ஹர்ஷா செமுடு முக்கிய கதாபாத்திரத்திலும் நடிக்கிறார்கள். இப்படம் டிசம்பர் 12-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.






