'மோனிகா' பாடலை பார்த்த மோனிகா பெலூச்சி

சென்னை,
சமீபத்திய நேர்காணல் ஒன்றில் நடிகை பூஜா ஹெக்டே ‘மோனிகா’ பாடலை மோனிகா பெலூச்சி பார்த்தது மகிழ்ச்சியாக உள்ளதாக தெரிவித்தார். அவர் கூறுகையில்,
“எனக்கு கிடைத்த பாராட்டுகளிலேயே இது மிகப் பெரியது. அவருக்கு இந்த பாடல் பிடித்திருக்கிறது என்பதை கேட்க மகிழ்ச்சியாக உள்ளது. மோனிகா பெலூச்சியின் இன்ஸ்டாகிராமில் பல தமிழ் ரசிகர்கள் ‘மோனிகா’ பாடலை பார்க்கச் சொல்லி கமெண்ட் செய்தனர்” என்றார்.
நடிகர் ரஜினிகாந்த் – இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் கூலி. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தில் அமீர் கான், சத்யராஜ், நாகர்ஜுனா, சவுபின் ஷாஹிர், ஸ்ருதிஹாசன் மற்றும் உபேந்திரா ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நிலவி வருகிறது. கூலி திரைப்படம் வரும் 14ம் தேதி வெளியாகிறது.