மோடி பங்கேற்ற பொங்கல் விழாவில் கலந்து கொண்ட ‘பராசக்தி’ படக்குழு

மோடி பங்கேற்ற பொங்கல் விழாவில் கலந்து கொண்ட ‘பராசக்தி’ படக்குழு


டெல்லி,

தமிழகத்தின் மிகுந்த உற்சாகத்துடன், நீண்ட நாட்கள் தொடர்ந்து கொண்டாடப்படும் பண்டிகையாக இருப்பது பொங்கல் பண்டிகையாகும். அனைத்து வீடுகளிலும் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும், உறவினர்களும் இணைந்து, தமிழர்களின் பாரம்பரிய மரபுகளை நினைவுபடுத்தும் வகையில் இந்த பண்டிகை கொண்டாடப்படும்.

இந்தநிலையில், மத்திய தகவல் ஒலிபரப்பு மற்றும் மீன்வளத்துறை இணை மந்திரி டாக்டர் எல். முருகன், ஆண்டுதோறும் டெல்லியில் உள்ள தனது இல்லத்தில் பொங்கல் விழாவைத் தமிழர்களின் பாரம்பரியம் மாறாமல் கொண்டாடி வருகிறார். ‘ஒரே பாரதம் உன்னத பாரதம்’ என்ற நோக்கத்தின் அடிப்படையில் நடைபெறும் இந்த விழாவில், முக்கியத் தலைவர்கள் கலந்துகொள்வது வழக்கம். அந்த வகையில் எல். முருகன் இல்லத்தில் நடைபெற்ற பொங்கல் விழாவில் பிரதமர் மோடி பங்கேற்றார். இந்த விழாவில் தமிழகத்தை சேர்ந்த பாஜக தலைவர்களும் கலந்து கொண்டனர். மேலும் நடிகர்கள் சிவகார்த்திகேயன், ரவி மோகன், இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் உள்பட பராசக்தி படக்குழுவினரும் பங்கேற்றனர்.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *