மோகன்லாலின் “ஹிருதயப்பூர்வம்” டிரெய்லர் வெளியீடு

மோகன்லாலின் “ஹிருதயப்பூர்வம்” டிரெய்லர் வெளியீடு


மலையாள சினிமாவின் முன்னணி நடிகர் மோகன்லால். இவரது நடிப்பில் சமீபத்தில் கண்ணப்பா படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து மோகன்லால் பிரபல இயக்குனர் சத்யன் அந்திக்காடு இயக்கத்தில் உருவாகி வந்த ‘ஹருதயப்பூர்வம்’ என்கிற படத்தில் நடித்துள்ளார் . இதில் கதாநாயகியாக மாளவிகா மோகனன் நடிக்க, பிரேமலு புகழ் காமெடி நடிகர் சங்கீத் பிரதாப் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். 

இப்படத்தில் சங்கீதா, சித்திக், நிஷான், லாலு அலெக்ஸ், ஜனார்த்தனன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். அகில் சத்யன் வசனம் எழுத, ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார். கடந்த 2015ல் சத்யன் அந்திக்காடு-மோகன்லால் கூட்டணியில் வெளியான‘என்னும் எப்பொழுதும்’ படத்தை தொடர்ந்து 10 வருடங்களுக்குப் பிறகு இந்த படம் வெளியாவதாலும் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகமாகவே இருக்கிறது. 

இந்த நிலையில், ‘ஹருதயப்பூர்வம்’ படத்தின் டிரெய்லரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இப்படம் வரும் 28ம் தேதி வெளியாகிறது.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *