மோகன்லாலின் “விருஷபா” படத்தின் டீசர் வெளியீடு

மோகன்லால் நடிக்கும் பான் இந்தியா படம், ‘விருஷபா’. இதை கன்னட இயக்குநர் நந்தா கிஷோர் எழுதி இயக்குகிறார். இதில் ரோஷன் மேகா, ஸ்ரீகாந்த் மேகா, ராகிணி திவேதி, நேகா சக்ஸேனா, சஹ்ரா எஸ் கான் உட்பட பலர் நடித்துள்ளனர். ஏ.வி.எஸ் ஸ்டுடியோ சார்பில் அபிஷேக் வியாஸ், பர்ஸ்ட் ஸ்டெப் மூவிஸ் சார்பில் ஷியாம் சுந்தர், பாலாஜி டெலிபிலிம்ஸ் சார்பில் ஏக்தா கபூர், கனெக்ட் மீடியாவுக்காக வருண் மாத்தூர் இணைந்து தயாரித்துள்ளனர். நேகா சக்ஸேனா தமிழில், லொடுக்கு பாண்டி, ஒரு மெல்லிய கோடு, வன்முறை உட்பட சில படங்களில் நடித்துள்ளார்.. நேகா சக்ஸேனா தமிழில், லொடுக்கு பாண்டி, ஒரு மெல்லிய கோடு, வன்முறை உட்பட சில படங்களில் நடித்துள்ளார்.
காதல், பழிக்கு பழி வாங்கும் உணர்வு என இரண்டு நேர் எதிர் உணர்ச்சிகளுக்கு இடையேயான மோதலை மையமாகக் கொண்ட ‘விருஷபா’ திரைப்படம் உருவாகி வருவதாகத் தகவல். மேலும், பிரம்மாண்டமான ஆக்சன் என்டர்டெய்னராகவும், அப்பா- மகன் இடையிலான உறவை மையப்படுத்தியும் இப்படம் தயாராவதாகவும் கூறப்படுகிறது. சாம் சி.எஸ் இப்படத்துக்கு இசையமைத்துள்ளார். படத்தின் டப்பிங் பணிகளை மோகன்லால் முடித்துள்ளார்.
இந்நிலையில், ‘விருஷபா’ படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது.