மோகன்லாலின் "துடரும்" பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது

திருவனந்தபுரம்,
மலையாள சினிமாவில் சூப்பர் ஸ்டாராக இருக்கும் மோகன்லால், ‘நெரு’, ‘மலைக்கோட்டை வாலிபன்’ படங்களைத்தொடர்ந்து தனது 360-வது படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தை, இயக்குனர் தருண் மூர்த்தி இயக்குகிறார். ‘ஆப்ரேஷன் ஜாவா’, ‘சவுதி வெள்ளக்கா’ படங்களை இயக்கியதன் மூலம் இவர் கவனம் பெற்றார்.அண்மையில், இவர் நடிப்பில் வெளியான பரோஸ் திரைப்படம் வரவேற்பைப் பெறவில்லை. பிருத்விராஜ் இயக்கத்தில் நடித்த எம்புரான் படம் மார்ச் மாதம் திரைக்கு வருகிறது.
இதற்கிடையே, ‘சவுதி வெள்ளக்கா’ பட இயக்குநர் தருண் மூர்த்தி இயக்கத்தில் நடிகர்கள் மோகன்லால் – ஷோபனா இருவரும் இணைந்து நடித்த 56-வது படமான ‘துடரும்’ படத்தின் படப்பிடிப்பும் முடிவடைந்தது. ரஞ்சித் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜேக்ஸ் பிஜாய் இசையமைக்கிறார். 1985-ல் முதன்முதலாக மோகன்லால்- ஷோபனா இணைந்து ‘அவிடத்தி போலே இவிடேயும்’ என்ற படத்தில் நடித்தார்கள்.கடைசியாக 2004-ல் மாம்பழக்காலம் என்ற படத்தில் இணைந்து நடித்தார்கள். தற்போது மீண்டும் 20 வருடங்களுக்கு பிறகு இணைந்து நடித்துள்ளனர்.
இந்த நிலையில், இப்படத்தின் முதல் பாடலான, “கண்மணி பூவே” பாடலை வெளியிட்டுள்ளனர். ஹரி நாராயணன் எழுதிய இப்பாடலை எம்ஜி ஸ்ரீகுமார் பாடியுள்ளார்.