மேலாளர் நீக்கம் – நடிகர் விஷால் அதிரடி முடிவு

மேலாளர் நீக்கம் – நடிகர் விஷால் அதிரடி முடிவு


சென்னை,

விஷாலின் படத்தயாரிப்பு நிறுவனமான விஷால் பிலிம் பேக்டரி நிர்வாகியாகவும், புரட்சித் தளபதி விஷால் மக்கள் நல இயக்கத்தின் செயலாளராகவும் பொறுப்பு வகித்து வந்த ஹரிகிருஷ்ணனை நீக்கி அறிவிப்பு வெளியிட்டுள்ள நடிகர் விஷால், பொதுமக்கள், ரசிகர்கள் யாரும் அந்த நபரை தொடர்பு கொள்ள வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதுதொடர்பாக நடிகர் விஷால் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அன்புடையீர் வணக்கம், நான் இந்தக் கடிததிதின் வாயிலாக தங்களுக்கு அனைவருக்கும் தெரிவிப்பது, வ.ஹரிகிருஷ்ணன் அவர்கள் எனது விஷால் பிலிம் பேக்டரி நிறுவனம், தேவி சமூக சேவை அறக்கட்டளை மற்றும் நமது விஷால் மக்கள் நல இயக்கம் ஆகியவற்றுடன் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ எந்தத் திறனிலும் தொடர்புடையவர் அல்ல.

பொதுமக்கள், திரைத்துறை நண்பர்கள், ரசிகர்கள் மற்றும் நலம் விரும்பிகள் என் தொடர்பான எந்தவொரு விஷயத்திலும் வ.ஹரிகிருஷ்ணனைத் தொடர்பு கொள்ளவோ அல்லது கையாளவோ வேண்டாம் என்று இதன்மூலம் அறிவுறுத்தப்படுகிறார்கள். மேலும் தகவல்கள் ஏதேனும் இருந்தால், உரிய நேரத்தில் தெரிவிக்கப்படும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *