”மெய்யழகன்” இயக்குனரின் அடுத்த படத்தில் பகத் பாசில்|Meiyazhagan director C Prem Kumar’s next to star Fahadh Faasil

சென்னை,
’96’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான சி பிரேம் குமார், தனது அடுத்த படங்களை பற்றி பகிர்ந்துள்ளார்.
கடந்த ஆண்டு ”மெய்யழகன்” படத்தை இயக்கி இருந்த இவர், தனது மூன்றாவது படத்தில் பகத் பாசிலுடன் கைகோர்த்துள்ளார். பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளர் கோபிநாத்திடம் ஒரு நேர்காணகில் பேசிய சி பிரேம் குமார், தனது வரவிருக்கும் படம் குறித்த விவரங்களையும் பகிர்ந்து கொண்டார்.
பகத் பாசிலுடன் தான் எடுக்கும் படம் பற்றி பிரேம் குமார் பேசுகையில், “பகத் பாசிலுடன் நான் எடுக்கும் படம் இதுவரை நான் எடுத்த படங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும். அது ஒரு திரில்லர். இப்படத்தில் கதையை கடந்த நான்கு வருடங்களாக என்னுடன் சுமந்து வருகிறேன்.
மனதைத் தொடும் படங்களை கொடுத்ததால், ஆக்சன் திரில்லர் படங்களை எடுக்க வேண்டாம் என்று பலர் கூறினர். அதுதான் என்னை இந்தப் படத்தை உருவாக்க காரணம். இந்த ஜனவரியில் நாங்கள் படப்பிடிப்பை தொடங்குவோம்” என்றார்.