மெட்டா ஏஐ- யில் இனி தீபிகா படுகோன் குரல் ஒலிக்கும்.. எப்படி தெரியுமா?

சமூக வலைத்தளங்களில் கோலோச்சி வரும் மெட்டா நிறுவனத்தின் ஏஐ- யுடன் பிரபல பாலிவுட் நடிகை தீபிகோ படுகோன் கைகோர்த்துள்ளார். அதாவது, மெட்டா ஏஐ வாய்ஸ் சாட்டில் இனி தீபிகா படுகோன் குரல் ஒலிக்கும். மெட்டா ஏஐ-யுடனான இந்த ஒத்துழைப்பு குறித்து தீபிகா படுகோனே தனது வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.
இது தொடர்பாக தீபிகா படுகோன் தனது இன்ஸ்டகிராமில் வெளியிட்டு இருந்த பதிவில் கூறியிருப்பதாவது: மெட்டா ஏஐ -யுடன் ஒரு அங்கமாகியுள்ளேன். ஆங்கிலத்தில் எனது குரலுடன் நீங்கள் வாய்ஸ் சேட் செய்யலாம். இந்தியா, அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, ஆஸ்திரெலியா, நியூசிலாந்து நாடுகளில் இந்த வசதி கிடைக்கும். இதை முயற்சித்து பார்த்து எப்படி இருக்கு என்று என்னிடம் தெரிவியுங்கள்” என்று பதிவிட்டுள்ளார்.
ஏஐ-வாய்ஸ் அஸ்சிஸ்டண்ட் வசதிக்கு குரலை பயன்படுத்த அனுமதி அளித்துள்ள முதல் இந்திய பிரபலம் தீபிகா படுகோன் தான் ஆவார். பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வரும் தீபிகா படுகோன் கடைசியாக கல்கி 2898 ஏடி படத்தில் நடித்து இருந்தார். தற்போது சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் உருவாகி வரும் “கிங்” திரைப்படத்தில் ஷாருக்கானுடன் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.