”மூக்குத்தி அம்மன் 2” படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு

சென்னை,
2020ம் ஆண்டு ஆர்.ஜே பாலாஜி இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் வெளிவந்த ‘மூக்குத்தி அம்மன்’ படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. ‘மூக்குத்தி அம்மன்’ முதல் பாகத்தில் நடிகை நயன்தாரா அம்மன் வேடத்திலும் ஆர்ஜே பாலாஜி முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்திருந்தனர். இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இரண்டாம் பாகம் உருவாக உள்ளது. இப்படத்தில் நயன்தாரா மீண்டும் மூக்குத்தி அம்மனாக நடிக்கவுள்ளார். சுந்தர் சி இயக்கவுள்ள இப்படத்தினை வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் உடன் ரவுடி பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்க உள்ளன.
நயன்தாரா, ரெஜினா கசான்ட்ரா மற்றும் பலர் நடிக்கும் ‘மூக்குத்தி அம்மன் 2’ படத்தின் பூஜையை சமீபத்தில் சென்னையில் பிரமாண்டமாக நடத்தினார்கள். இந்த பூஜையில் நயன்தாரா, குஷ்பு, மீனா, ஹிப்ஹாப் ஆதி உள்ளிட்ட பிரபலங்கள் கலந்துகொண்டனர்.
அதனை தொடர்து படம் தொடர்பான எந்தவிதமான அப்டேட்டுகளும் இல்லாமல் இருந்தது. இந்த நிலையில், படக்குழு சார்பில் இருந்து படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை ரிலீஸ் செய்துள்ளனர். இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டரில் நயன்தாரா மூக்குத்தி அம்மனாக கையில் சூலாயுதத்துடன் கோபமாக அமர்ந்து இருக்கிறார். இந்த போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் நல்ல கவனத்தைப் பெற்றுள்ளது.