முரளி, வடிவேலு நடித்த ‘சுந்தரா டிராவல்ஸ்’ ரீ-ரிலீஸ் ஆகிறது

சென்னை,
2002-ம் ஆண்டு வெளியாகி மாபெரும் வரவேற்பைப் பெற்ற படம் ‘சுந்தரா டிராவல்ஸ்’. தஹா இயக்கிய இந்த படத்தில் முரளி, வடிவேலு, ராதா, பி.வாசு உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். மேலும் வினுசக்கரவர்த்தி, ராதா ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள். இப்படத்தின் காமெடி காட்சிகள் இப்போதும் தொலைக்காட்சிகளில் கொண்டாடப்பட்டு வருகிறது.
இப்படம் மலையாளத்தில் வெற்றி பெற்ற ‘இ பறக்கும் தள்ளிகா’ என்ற படத்தின் ரீமேக் ஆகும். அதனையும் தஹாதான் இயக்கினார். படத்தின் ஆரம்பம் முதல் இறுதி வரை முழுக்க நகைச்சுவை நிறைந்து இருக்கும் இப்படம் வடிவேலுவுக்கும் முரளிக்கும் ஒரு திருப்புமுனை ஏற்படுத்திய திரைப்படமாக அமைந்தது.
இந்த நிலையில் இப்படத்தினை மெருக்கேற்றி 4கே தரத்தில் மீண்டும் ரீ-ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருந்தனர். இப்படம் கடந்த மே மாதமே ரிலீஸ் செய்யப்பட இருந்தது, ஒரு சில காரணத்தால் படம் ரிலீஸ் ஆகவில்லை. இப்போது ஆகஸ்ட் 8, நாளை படம் ரிலீஸ் என அறிவிக்கப்பட்டுள்ளது. படம் வெளியாகி 23 ஆண்டுகள் கழித்து ரீ-ரிலீசாவதால் படத்தினை எதிர்பார்த்து ரசிகர்கள் ஆவலுடன் காத்துக்கொண்டுள்ளனர்.