”முந்தைய படங்களுக்கு மன்னிக்கவும்.. இனிமேல் நல்ல படங்கள் மட்டுமே செய்வேன்” – நிதின்|”Sorry for the previous films.. I will only do good films from now on”

சென்னை,
நிதின் தனது முந்தைய படங்களின் தோல்விக்காக தனது ரசிகர்களிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுள்ளார். இனிமேல் நல்ல படங்களுடன் மட்டுமே வருவேன் என்று உறுதியளித்தார்.
நிதின் மற்றும் சப்தமி கவுடா நடித்த ‘தம்முடு’ படம் கடந்த 4-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது.
இப்படம் வெளியாவதற்கு முன்பு ஒரு விழாவில் பேசிய நிதின், “இந்தப் படம் மூன்று பேருக்காக வெற்றி பெற வேண்டும் என்று நான் மனதார வேண்டுகிறேன்.
ஒருவர் இந்தப் படத்திற்காக இரண்டு வருடங்கள் கடுமையாக உழைத்த இயக்குனர் வேணு ஸ்ரீராம். இரண்டாவது என்னை நேசிக்கும் ரசிகர்களுக்கள். எனது வெற்றிகளைக் கண்டு மகிழ்ச்சியடைபவர்களுக்கும், தோல்வியடையும்போது வருத்தப்படுபவர்களுக்காகவும். மூன்றாவது இந்த படத்தின் படக்குழுவிற்காக வெற்றி பெற வேண்டும்.
சமீபத்திய எனது படங்கள் உங்களை ஏமாற்றி இருப்பதை நான் அறிவேன். அதற்காக அனைவரும் என்னை மன்னித்துவிடுங்கள். இனிமேல் நல்ல கதைகளுடன் வருவேன் என்று உறுதியளிக்கிறேன்” என்றார்.