முத்தமிட முயன்ற ரசிகர்…அதிர்ச்சியடைந்த நடிகை – வைரலாகும் வீடியோ

மும்பை,
பிரபல பாலிவுட் நடிகை பூனம் பாண்டே (வயது 32). மாடலிங் துறையில் பிரபலமான இவர் நிஷா என்ற திரைப்படம் மூலம் அறிமுகமாகி இந்தி, கன்னடா, தெலுங்கு படங்களில் நடித்துள்ளார்.
2011ம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா கோப்பையை வென்றால் நிர்வாணமாக போஸ் கொடுப்பேன் என கூறி சர்ச்சைக்குள் சிக்கினார். சமீபத்தில் இவர் இறந்துவிட்டதாக பொய் செய்தி பரவியது.
இவ்வாறு சர்ச்சைக்கு பேர்போன நடிகை பூனம் பாண்டே, தற்போது ரசிகரின் செயலால் அதிர்ச்சியடைந்திருக்கிறார். அதன்படி, புகைப்படத்திற்கு போஸ் கொடுத்துக்கொண்டிருந்த நடிகை பூனம் பாண்டேவிடம் ரசிகர் ஒருவர் செல்பி எடுக்க வந்தார்.
அப்போது நடிகையை அந்த ரசிகர் வலுக்கட்டாயமாக முத்தமிட முயன்றார். இதனால் அதிர்ச்சியடைந்த நடிகை தள்ளிப்போனார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.