முதல் முறையாக நந்தமுரி பாலகிருஷ்ணா படத்திற்கு இசையமைக்கும் அனிருத்?

ஐதராபாத்,
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நந்தமுரி பாலகிருஷ்ணா. இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் டாகு மகாராஜ். பாபி கொல்லி இயக்கிய இப்படத்திற்கு எஸ் தமன் இசையமைத்திருந்தார்.
இதில், பாபி தியோல், ஷ்ரத்தா ஸ்ரீநாத், ஊர்வசி ரவுத்தேலா மற்றும் சாந்தினி சவுத்ரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். கடந்த 12-ம் தேதி வெளியான இப்படம் ரூ.100 கோடிக்கு மேல் வசூலித்து அசத்தியது.
இப்படத்தையடுத்து, நந்தமுரி பாலகிருஷ்ணா அகண்டா 2 படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், நந்தமுரி பாலகிருஷ்ணாவின் அடுத்த படத்தை கோபிசந்த் மலினேனி இயக்க இருப்பதாகவும், இப்படத்திற்கு இசையமைக்க அனிருத்திடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
இந்த செய்தி உண்மையாகும் பட்சத்தில் நந்தமுரி பாலகிருஷ்ணாவின் படத்திற்கு அனிருத் முதல்முறையாக இசையமைப்பார். சமீபத்தில், தெலுங்கு நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பில் வெளியான தேவரா படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.