முதல் முறையாக தயாரிப்பாளராக களமிறங்கும் சிம்ரன்

முதல் முறையாக தயாரிப்பாளராக களமிறங்கும் சிம்ரன்


சென்னை,

அழகு, நடிப்பு, நடனம், கவர்ச்சி, குரல் என அனைத்திலும் தனித்துவம் காட்டி தமிழ் சினிமா ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்து இருப்பவர் சிம்ரன். ரஜினி, கமல், சரத்குமார், விஜய், அஜித், சூர்யா, பிரசாந்த் உள்பட பல முன்னணி கதாநாயகர்களுடன் இணைந்து நடித்து முன்னணி கதாநாயகியாக திகழ்ந்தவர் சிம்ரன். 2003-ம் ஆண்டு தீபக் பாகாவை திருமணம் செய்து அவருக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். திருமணத்திற்கு பிறகும் படங்களில் நடித்து வரும் சிம்ரன் சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான டூரிஸ்ட் பேமிலி படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

தொடர்ந்து பல படங்களில் தனது யதார்த்த நடிப்பினால் திரை உலகில் சிம்ரன் தனி முத்திரை பதித்து வருகிறார். தமிழ் சினிமா கொண்டாடி வரும் நடிகைகளில் ஒருவரான சிம்ரன் தற்போது முதன்முறையாக தயாரிப்பாளராக களம் இறங்க இருக்கிறார். தயாரிப்பு மட்டுமின்றி படத்தில் நடிக்கவும் உள்ளார். ‘போர் டி மோசன் பிக்சர்ஸ்’ என பெயரிடப்பட்டுள்ள இந்நிறுவனம் சார்பில் திரில்லர், ஆக்சன் கதை களத்தில் உருவாகும் புதிய படத்தினை தயாரிக்க உள்ளார்.

இந்த படத்தை அறிமுக இயக்குனர் ஷியாம் இயக்குகிறார். படப்பிடிப்பிற்கான முதற்கட்ட பணிகளில் சிம்ரன் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். படத்தில் தேவயானி, நாசர் உள்பட பலர் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. விரைவில் படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *