முதல் பாடலின் புரொமோ வெளியிட்ட படக்குழு|Makers of Rajinikanth’s ‘Coolie’ drop cool promo for ‘Chikitu’ music video

முதல் பாடலின் புரொமோ வெளியிட்ட படக்குழு|Makers of Rajinikanth’s ‘Coolie’ drop cool promo for ‘Chikitu’ music video


சென்னை,

கூலி படத்தின் முதல் பாடலான ”சிக்கிட்டு” இன்று மாலை 6 மணிக்கு வெளியாக உள்ளநிலையில், அப்பாடலின் புரொமோவை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.

‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் ‘வேட்டையன்’ படத்தின் வெற்றிப்பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘கூலி’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தில் நாகார்ஜுனா, உபேந்திரா, சோபின் சாஹிர், சத்யராஜ், சுருதிஹாசன் என நட்சத்திர பட்டாளங்களே நடித்துள்ளனர். மேலும் கேமியோ ரோலில் பாலிவுட் நடிகர் அமீர்கான் நடித்துள்ளார்.

இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். நடிகை பூஜா ஹெக்டே சிறப்பு பாடல் ஒன்றில் நடனமாடியுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்த நிலையில், தற்போது இதன் போஸ்ட் புரொடக்சன் வேலைகள் நடைபெற்று வருகின்றன. தங்க கடத்தலை மையமாக கொண்டு உருவாகப்பட்டுள்ள, இப்படம் வருகிற ஆகஸ்ட் 14-ந் தேதி வெளியாக உள்ளது.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *