முதல் நாளை விட 2-வது நாளில் அதிகம் வசூலித்த ’டியூட்’…எவ்வளவு தெரியுமா?|’Dude’ collected more on the second day than the first day… Do you know how much?

சென்னை,
பிரதீப் ரங்கநாதன், மமிதா பைஜு நடிப்பில் வெளியான ‘டியூட்’ திரைப்படம் 2 நாட்களில் ரூ.45 கோடி வசூல் செய்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.
’டியூட்’ திரைப்படம், முதல் நாளில் ரூ.22 கோடி வசூலித்திருந்தநிலையில், 2-வது நாளில் ரூ.23 கோடி வசூலித்துள்ளது. முதல் நாளை விட 2-வது நாளில் ரூ.1 கோடி அதிகம் வசூலித்து மொத்தம் 2 நாட்களில் ரூ. 45 கோடி வசூலித்திருக்கிறது.
கீர்த்திஸ்வரன் இயக்கத்தில் ‘டியூட்’ படத்தில் பிரதீப் நடித்துள்ளார். மைத்ரீ மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் ‘டியூட்’ படத்தில் கதாநாயகியாக மமிதா பைஜு நடித்துள்ளார். சாய் அபயங்கர் இசையமைத்துள்ள இந்தப் படத்தில் சரத் குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.