முதல் நாளில் அதிகம் வசூலித்த ஏ-ரேட்டிங் படம்… ’மார்கோ’வை முந்திய ’டைஸ் ஐரே ’|Dies Irae beats Marco to become the biggest A-rated Malayalam opener

முதல் நாளில் அதிகம் வசூலித்த ஏ-ரேட்டிங் படம்… ’மார்கோ’வை முந்திய ’டைஸ் ஐரே ’|Dies Irae beats Marco to become the biggest A-rated Malayalam opener


சென்னை,

ராகுல் சதாசிவன் இயக்கத்தில் பிரணவ் மோகன்லால் நடிப்பில் நேற்று திரையரங்குகளில் வெளியான டைஸ் ஐரே படம் நேர்மறையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது.

இப்படம் தற்போது மலையாளத்தில் மார்கோவை முந்தி, முதல் நாளில் அதிகம் வசூலித்த ஏ-ரேட்டிங் படமாக உருவெடுத்துள்ளது. இந்தப் படம் உலகளவில் ரூ. 12 கோடிக்கு மேல் வசூலித்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

இந்தப் படத்தை நைட் ஷிப்ட் ஸ்டுடியோஸ் மற்றும் ஒய்.என்.ஓ.டி ஸ்டுடியோஸ் ஆகிய நிறுவனங்களின் கீழ் சக்ரவர்த்தி ராம சந்திரா மற்றும் எஸ். சசிகாந்த் ஆகியோர் தயாரித்துள்ளனர். சுஷ்மிதா பட், கிபின் கோபிநாத், ஜெயா குருப் மற்றும் அருண் அஜிகுமார் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர். கிறிஸ்டோ சேவியர் இசையமைத்துள்ளார்.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *