முதன்மை கதாபாத்திரங்களில் மட்டும் நடிக்கும் நடிகை நான் இல்லை -ஊர்வசி | I am not an actress who only plays lead roles

முதன்மை கதாபாத்திரங்களில் மட்டும் நடிக்கும் நடிகை நான் இல்லை -ஊர்வசி | I am not an actress who only plays lead roles


சென்னை,

தமிழில் பாக்யராஜ் இயக்கி நடித்த ‘முந்தானை முடிச்சு’ படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகி 1980 மற்றும் 90-களில் தென்னிந்திய திரையுலகில் முன்னணி கதாநாயகியாக கொடிக்கட்டி பறந்தவர் ஊர்வசி. இவர் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட அனைத்து முன்னணி நடிகர்களுடனும் நடித்து இருக்கிறார். 40 ஆண்டுகளுக்கு மேலாக திரை உலகில் தவிர்க்க முடியாத நடிகையாக இருந்து வருகிறார். இவருக்கென தென்னிந்திய திரை உலகில் ஏராளமான ரசிகர்கள் இருந்து வருகின்றனர்.

தற்போது ஊர்வசி சில படங்களில் குணசித்திர கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இவருக்கு 71வது தேசிய திரைப்பட விருது விழாவில் சிறந்த குணச்சித்திர நடிகைக்கான விருது பெற்றார்.

இந்த நிலையில், நடிகை ஊர்வசி தற்போது அளித்த பேட்டியில், “சினிமா உலகில் இது ஒன்றும் புதிதல்ல. நம்மை நோக்கி கதாபாத்திரங்கள் நிறைய வருகின்றன. அனைத்து கதாபாத்திரங்களையும் நாம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. சில நேரங்களில் நமக்கு நேரமில்லாமல் இருக்கலாம், கதை பிடிக்காமல் இருக்கலாம் என பல காரணங்கள் உள்ளன.

உள்ளொழுக்கு போன்ற சில படங்களில் உள்ள கதாபாத்திரத்தை நாமே நடிக்க வேண்டும் என்று வலியுறுத்தும் இயக்குனர்கள் இருக்கிறார்கள். முதன்மை கதாபாத்திரங்களில் மட்டுமே நடிக்க வேண்டும் என்று வலியுறுத்தும் நடிகை நான் இல்லை. படங்களுக்கு நாமே டப்பிங் செய்வது நல்லது.” இவ்வாறு அவர் கூறினார்.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *