முடிவடையும் நிலையில் நடிகர் சங்க கட்டிடம் ; கட்டுமான நிலை குறித்த வீடியோ வெளியீடு

சென்னை,
புதிதாகக் கட்டப்பட்டு வரும் தென்னிந்திய நடிகர் சங்கக் கட்டிடம் இன்னும் சில மாதங்களில் கட்டி முடிக்கப்பட இருக்கிறது. தற்போதைய கட்டுமான நிலவரம் பற்றிய வீடியோவை நடிகர் சங்கம் வெளியிட்டுள்ளது. அதில் ஒவ்வொரு தளமும் எந்த நிலையில் உ்ள்ளது என்று கூறப்பட்டுள்ளது.
பிரம்மாண்ட ஆடிட்டோரியம், கூட்ட அரங்கம், மினி கன்வென்ஷன் ஹால், உணவுக் கூடம், சங்க அலுவலகம், வாடகைக்கு விடப்பட உள்ள தளம், பார்க்கிங் என முடிவடையும் நிலையில் உள்ள கட்டிடப் பகுதிகள் அந்த வீடியோவில் இடம் பெற்றுள்ளன. “பெரிய ஒரு கனவு, நாங்கள் எடுத்துக் கொண்ட கடமை, இன்று நடப்பில். விரைவில் நிறைவுறும், கனவு நனவாய். வானுயர ஓங்கி நிற்கும் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பெருமை’ என அந்த வீடியோவில் தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர் நாசர் பேசியுள்ளார்,
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக விஷால் உள்ளார். இவர் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுச்செயலாளராகவும் செயல்பட்டு வருகிறார். நடிகர் சங்கத்திற்கு கட்டிடம் கட்டப்பட்ட பின்னரே நான் திருமணம் செய்துகொள்வேன் என்று விஷால் ஏற்கனவே அறிவித்தார். தற்போது நடிகர் சங்க கட்டிடம் கட்டும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. சமீபத்தில் நடிகை சாய் தன்ஷிகாவைக் காதலிப்பது பற்றி அறிவித்திருந்தார். இவர்கள் திருமணம், இந்த கட்டிடத்தில் நடக்கும் முதல் திருமணமாக இருக்கும் என்று தெரிகிறது.