மீம்ஸ்களாலும், டிரோல்களாலும் என்னை ஒன்றும் செய்ய முடியாது – நடிகை பிபாசா பாசு | Memes and trolls can’t do anything to me

மீம்ஸ்களாலும், டிரோல்களாலும் என்னை ஒன்றும் செய்ய முடியாது – நடிகை பிபாசா பாசு | Memes and trolls can’t do anything to me


விஜய் நடித்த ‘சச்சின்’ படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் பிரபலமானவர் பிபாசா பாசு. தொடர்ந்து இந்தி திரை உலகில் பல படங்களில் நடித்து முன்னணி கதாநாயகியாக இருந்தார். நடிகர் கரண்சிங் குரோவரை திருமணம் செய்து கொண்ட பிபாசா பாசுவுக்கு கடந்த ஆண்டு பெண் குழந்தை பிறந்தது.

குழந்தை பிறந்த பின் பிபாசா பாசு உடல் பருமனாக தொடங்கியது. பிபாசா பாசு உடல் எடை அதிகரித்தது பற்றி சமூக வலைதளங்களில் விமர்சனம் செய்து வருகின்றனர். இதற்கு பதிலளித்து பிபாசா பாசு வெளியிட்டுள்ள பதிவில், உங்கள் தெளிவான வார்த்தைகளுக்கு நன்றி. மனித இனம் என்றென்றும் இவ்வளவு ஆழமற்றதாகவும் தாழ்ந்ததாகவும் இருக்க கூடாது என நம்புகிறேன். பெண்கள் பல கேரக்டர்களை சமாளிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.

நான் அன்பான துணை மற்றும் குடும்பத்தினருடன் கூடிய தன்னம்பிக்கை கொண்ட பெண். மீம்ஸ்களும், ட்ரோல்களும் என்னை ஒரு போதும் வரையறுக்கவில்லை. எனது இடத்தில் இன்னொரு பெண் இருந்திருந்தால் இந்த கொடூரத்தால் ஆழமாக பாதிக்கப்பட்டு காயமடைய கூடும். பெண்களை புரிந்து கொண்டு பாராட்டினால் அவர்கள் மேலும் உயர்வார்கள். நாங்கள் தடுத்து நிறுத்த முடியாத பெண்கள். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *