மீண்டும் ஷாருக்கானுடன் இணையும் தீபிகா படுகோன்

மீண்டும் ஷாருக்கானுடன் இணையும் தீபிகா படுகோன்


மும்பை,

இந்தி பட உலகில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் ஷாருக்கான். இவருக்கு கடந்த 2002-ல் வெளியான தேவதாஸ் மிகப்பெரிய பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. கடந்த 2023-ம் ஆண்டு வெளியான ‘பதான்’, ‘ஜவான்’, ‘டங்கி’ படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றன.

தற்போது இவர் ‘கிங்’ படத்தில் நடிக்க உள்ளார். இதில் அவரது மகள் சுஹானா கானும் நடிக்கிறார். இப்படத்தை வார் மற்றும் பதான் பட புகழ், சித்தார்த் ஆனந்த் இயக்குகிறார்.

அடுத்த மாதம் 18-ம் தேதி இப்படத்தின் படப்பிடிப்பு துவங்குகிறது. இதில் சுஹானா கானின் அம்மாவாக தீபிகா படுகோன் நடிக்க உள்ளதாக ஏற்கனவே தகவல் வெளியாகி இருந்தநிலையில் தற்போது அது கிட்டத்தட்ட உறுதியாகி உள்ளது. ஆனால் எந்த கதாபாத்திரம் என்பது பற்றி இன்னும் சரியான தகவல் வெளியாகவில்லை.

தீபிகா படுகோன், ஷாருக்கானுடன் ஏற்கனவே, ‘ஓம் சாந்தி ஓம்’, சென்னை எக்ஸ்பிரஸ்’, ‘ஹேப்பி நியூ இயர்’, ‘பதான்’ மற்றும் ‘ஜவான்’ ஆகிய படங்களில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *