மீண்டும் சர்ச்சையில் சிக்கிய ராஷ்மிகா

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவின் முன்னணி கதாநாயகிகளில் ராஷ்மிகா மந்தனா முன்னணி இடத்தில் இருப்பவர். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான குபேரா திரைப்படம் மக்களிடையே பெறும் வரவேற்பை பெற்று வருகிறது. அதனை தொடர்ந்து ‘தி கேர்ள்பிரண்ட்’ என்ற படத்தில் நடித்துவருகிறார். மேலும் ‘கிரிக்பார்ட்டி’ என்ற படத்தின் மூலம் கன்னட திரை உலகில் அறிமுகமாகி உள்ளார்.
இதற்கிடையில் தனது கருத்துக்களால் அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கி கொள்ளும் ராஷ்மிகா மந்தனா. சமீபத்தில் நடந்த நேர்காணலில் கலந்து கொண்டு பேசியதாவது, “கொடவா சமூகத்தில் இருந்து இதுவரை யாரும் சினிமாத் துறையில் நுழைந்ததில்லை. ஒரு நடிகையாக சினிமாவில் நுழைந்த முதல் நடிகை நான்தான் என கூறினார்.
ராஷ்மிகா கருத்துக்கள் திரை உலகில் சர்ச்சையை ஏற்படுத்தியதுடன் அவருக்கு எதிராக கண்டன விமர்சனங்களும் எழுந்தது. கொடவா சமூகத்தில் இருந்து ஏற்கனவே ஆண்ட பிரேமா, தஸ்வினி, கரும்பையா, ரீஷ்மா, நானையா, ஸ்வேதா, செங்கப்பா, வர்ஷா பொல்லம்மா, நிதிசுப்பையா, அஸ்வினி நாச்சப்பா, ஹர்சிகா பூனாச்சா, சுப்ரா அய்யப்பா ஆகியோர் சினிமாவிற்கு வந்துள்ளனர். இவர்கள் பல ஆண்டுகளாக திரை உலகில் ஜொலித்து வருகின்றனர். இந்நிலையில் ராஷ்மிகா மந்தனாவின் கொடவா சமூகம் குறித்த பேச்சு விவகாரமாகி இருக்கிறது.