மீண்டும் இணையும் விஜய் சேதுபதி-ருக்மிணி வசந்த்…இயக்குனர் இவரா?

சென்னை,
விஜய் சேதுபதியின் ‘ஏஸ்’ படத்தில் கதாநாயகியாக நடித்து தமிழில் அறிமுகமான ருக்மிணி வசந்த், தற்போது மீண்டும் அவருடன் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இப்படத்தை மணிரத்னம் இயக்க உள்ளதாக கூறப்படுகிறது.
மணிரத்னத்தின் அடுத்த படம் பற்றிய தகவல் அடிக்கடி இணையத்தில் பரவி வருகிறது. கடைசியாக மணிரத்னம் இயக்கத்தில் வெளியான தக் லைப் படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை.
இதன் மூலம், சிறிது இடைவெளிக்குப் பிறகு புதிய காதல் கதையை இயக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஒருபுறம், துருவ் விக்ரம் இந்த படத்தில் ஹீரோவாக நடிக்கவுள்ளதாக ஒரு வதந்தி பரவி வருகிறது.
மறுபுறம், அவர் சிம்புவை வைத்து ஒரு படம் எடுக்க போவதாக செய்திகள் வருகின்றன. சிம்புவுக்கு கதை சொல்லப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதற்கிடையில் சிம்பு வெற்றிமாறன் இயக்கும் அரசன் படத்தில் பிஸியாக நடித்து வருவதால், அவருக்குப் பதிலாக விஜய் சேதுபதி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.
விஜய் சேதுபதிக்கு ஜோடியாக தற்போது முழு பார்மில் இருக்கும் நடிகை ருக்மணி வசந்தை தேர்வு செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பேச்சு வருகிறது. இந்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.






