மீண்டும் இணையும் "பிச்சைக்காரன்" பட கூட்டணி

சென்னை,
விஜய் ஆண்டனி ஆரம்பத்தில் இசையமைப்பாளராக திரைத்துறையில் நுழைந்தவர். பின்னர் நடிப்பதிலும் ஆர்வம் கொண்டு “சலீம், இந்தியா பாகிஸ்தான், பிச்சைக்காரன்” உள்ளிட்ட படங்களின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தார். இவர் தற்போது முழு நேர நடிகராகி விட்டார். வள்ளி மயில், அக்னி சிறகுகள் ஆகிய படங்கள் ரிலீசுக்கு தாமதமாகியுள்ளன. மார்கன் திரைப்படம் வருகின்ற ஜூன் 27ஆம் தேதி திரைக்கு வர உள்ளது. மேலும் இவர் சக்தித் திருமகன், லாயர் போன்ற படங்களை கைவசம் வைத்திருக்கிறார்.
இந்நிலையில் இவர், மீண்டும் இயக்குனர் சசியுடன் இணைந்து புதிய படம் ஒன்றில் நடிக்கப் போவதாக தகவல் வெளியாகியிருக்கிறது. அதாவது கடந்த 2016ம் ஆண்டு சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் பிச்சைக்காரன் எனும் திரைப்படம் வெளியானது. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று மாபெரும் வெற்றி படமாக அமைந்தது. தற்போது சசி – விஜய் ஆண்டனி கூட்டணி மீண்டும் இணைய இருக்கும் தகவல் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இனிவரும் நாட்களில் மற்ற அப்டேட்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்திரைப்படத்தில் விஜய் ஆண்டனியுடன் அவரின் தங்கை மகன் அஜய் திஷான், சுவாசிகா உள்ளிட்டோர் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.