மீண்டும் இணையும் தனுஷ்-அனிருத் காம்போ.. எந்த படத்தில் தெரியுமா?

சென்னை,
தமிழ்த் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர் அனிருத். இவர் தனுஷ், ஸ்ருதி ஹாசன் நடிப்பில் வெளியான ‘3’ படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். அந்தப் படத்துக்குப் பிறகு ‘வேலையில்லா பட்டதாரி, மாரி, தங்கமகன், திருச்சிற்றம்பலம்’ போன்ற தனுஷ் நடித்த படங்களுக்கு அனிருத்தான் இசையமைப்பாளராக பணிபுரிந்தார்.
தனுஷ் – அனிருத் கூட்டணிக்கென்ற இசையுலகில் பெரிய ரசிகர்கள் பட்டாளமே உள்ளனர். ஆனால், “திருச்சிற்றம்பலம்” படத்திற்கு பிறகு மீண்டும் இவர்களின் கூட்டணி எப்போது அமையும் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்து கொண்டிருந்தனர்.
இதற்கிடையில், நடிகர் தனுஷ் ‘லப்பர் பந்து’ படத்தின் இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. மீண்டும் அனிருத்-தனுஷ் காம்போ இணைய உள்ளது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.