மீண்டும் இணையுமா ‘மதராஸி’ பட கூட்டணி?

சென்னை,
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக வலம் வரும் ஏ.ஆர்.முருகதாஸ், சிவகார்த்திகேயன் – ருக்மினி வசந்த் நடிப்பில் இயக்கிய ‘மதராஸி’ திரைப்படம் சமீபத்தில் வெளியானது. படத்தின் வசூல் ரூ.100 கோடியை நெருங்கியது.
இதற்கிடையில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் அடுத்த படம் குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது. அதன்படி மீண்டும் சிவகார்த்திகேயன் நடிப்பில் அவர் புதிய படம் இயக்கப்போவதாக பேச்சு அடிபடுகிறது.
சிவகார்த்திகேயன் நடித்த ‘பராசக்தி’ படம் அடுத்தாண்டு பொங்கல் பண்டிகையில் வெளியாகிறது. இந்த படத்தின் இறுதிகட்ட பணிகள் முடிந்த பிறகு சிவகார்த்திகேயன், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் புதிய படத்தில் இணைவதாகவும் பேசப்படுகிறது. இதுதொடர்பான பேச்சுவார்த்தை நடந்துகொண்டிருப்பதாக தகவல். இது இருதரப்பு ரசிகர்களுக்கும் மேலும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.