மீண்டும் இணையுமா “கூலி” பட கூட்டணி?

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள படம் கூலி. இந்த படம் வருகிற ஆகஸ்ட் 14ம் தேதி உலகளவில் வெளியாக உள்ளது. இதில் ஆமீர் கான், நாகார்ஜுனா, உபேந்திர ராவ், சத்யராஜ் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடித்து இருப்பதால் பான் இந்தியா அளவில் கூலி படத்திற்கு எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.
இந்த நிலையில், கூலி படத்தை தொடர்ந்து மீண்டும் லோகேஷ்-ரஜினி கூட்டணி இணையுமா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இந்த நிலையில், பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட லோகேஷ் மீண்டும் நாங்கள் இணைந்து பணிபுரிய உள்ளோம் என்று கூறியிருக்கிறார். அதற்காக கதையை தயார் செய்து கொண்டிருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்.
ரஜினி – லோகேஷ் கனகராஜ் கூட்டணி எப்போது இணையும், யார் தயாரிப்பாளர் உள்ளிட்ட எதுவுமே இன்னும் முடிவாகவில்லை. அதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.