மீண்டும் அந்த நடிகருடன் இணையும் அனுபமா?

மீண்டும் அந்த நடிகருடன் இணையும் அனுபமா?


சென்னை,

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் அனுபமா. இவர், சமீபத்தில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் வெளியான ‘டிராகன்’ படத்தில் தனது அற்புதமான நடிப்பை வெளிகாட்டி இருந்தார். பிரதீப் ரங்கநாதன் கதாநாயகனாக நடித்திருந்த இப்படம் பிளாக்பஸ்டரானது.

அனுபமா தற்போது பிரவீன் கந்த்ரேகுலா இயக்கத்தில் ‘பரதா’ படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், நடிகர் ஷர்வானந்தின் அடுத்த படத்தில் அவருக்கு ஜோடியாக அனுபமா நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சம்பத் நந்தியால் இயக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது..

ஸ்ரீ சத்ய சாய் ஆர்ட்ஸ் பேனரின் கீழ் கே.கே.ராதா மோகன் தயாரிக்கும் இப்படத்திற்கு பீம்ஸ் செரிரோலியோ இசையமைக்கிறார். அனுபமாவும் ஷர்வானந்தும் இதற்கு முன்பு ‘ஷதமானம் பவதி’ என்ற படத்தில் நடித்திருந்தனர். இப்படம் மிகப்பெரிய பிளாக்பஸ்டரானது. தற்போது மீண்டும் இவர்கள் இருவரும் இணைய உள்ளதாக வெளியாகி இருக்கும் தகவல் ரசிகர்களை உற்சாகப்படுத்தி இருக்கிறது.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *