மீண்டும் அந்த இயக்குனருடன் இணையும் நிஹாரிகா ?

சென்னை,
‘கமிட்டி குர்ரல்லு’ படத்தின் மூலம் பிரபலமானவர் இயக்குனர் யது வம்சி. இந்தப் படத்தை பிங்க் எலிபண்ட் பிக்சர்ஸ் பதாகையின் கீழ் நிஹாரிகா கொனிடேலா தயாரித்தார்.
இத்திரைப்படம் நல்ல வசூலை ஈட்டியது மட்டுமல்லாமல், தெலுங்கானா அரசின் கத்தார் விருதுகள் உட்பட பல விருதுகளை வென்றது.
இந்நிலையில், இந்த வெற்றிகரமான கூட்டணி மீண்டும் ஒரு புதிய படத்திற்காக இணைய உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு துவங்கும் என்று கூறப்படுகிறது. நடிகையாக இருந்து தயாரிப்பாளராக மாறி இருப்பவர் நிஹாரிகா கொனிடேலா என்பது குறிப்பிடத்தக்கது.