‘மிஷன்: இம்பாசிபிள் தி பைனல் ரெக்கனிங்’ படம்: இந்தியாவில் மட்டும் இத்தனை கோடி வசூலா? | Did the film ‘Mission: Impossible

சென்னை,
ஹாலிவுட் ரசிகர்களை பெரிதும் கவர்ந்த ஆக்சன் படங்களின் பட்டியலில் ‘மிஷன்: இம்பாசிபிள்’ படங்களுக்கு கண்டிப்பாக இடம் இருக்கும். ஆக்சன் ரசிகர்களை ஆச்சரியப்பட வைக்கும் இந்தப் படத்தின் முந்தைய பாகங்கள் ஹாலிவுட்டில் வெளியாகி வசூல் சாதனை படைத்துள்ளன.
சீக்ரட் ஏஜண்டாக டாம் குரூஸ் நடித்து 1996-ம் ஆண்டு முதன் முதலில் மிஷன் இம்பாஸிபிள் படம் வெளியானது. முதல்பாகம் பெரிய அளவில் வெற்றி பெற்றதை தொடர்ந்து அடுத்தடுத்ததாக 7-பாகங்கள் வெளியானது. இவை அனைத்துமே நல்ல வரவேற்பை பெற்றன. அதனை தொடர்ந்து 8-வது பாகமான “மிஷன்: இம்பாசிபிள் தி பைனல் ரெக்கனிங்” கடந்த 17-ந் தேதி வெளியாகி உள்ளது. இதில், ஹெய்லி அட்வெல், விங் ரேம்ஸ், சைமன் பெக், ரெபேக்கா பெர்குசன், வனேசா கிர்பி, ஈசாய் மோரல்ஸ் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.
கிறிஸ்டோபர் மெக்குவாரி இயக்கிய இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த நிலையில் இப்படம் 2 நாட்களில் செய்துள்ள வசூல் குறித்த விவரம் வெளியாகி உள்ளது. அதன்படி, இப்படம் இந்தியாவில் மட்டும் 2 நாட்களில் ரூ.45 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.