மிருணாள் தாகூரின் ’டகோயிட்’ – வெளியான முக்கிய அப்டேட்|DACOITFire Glimpse on MAY 26TH at 11:07 AM

சென்னை,
‘சீதா ராமம்’, ‘ஹாய் நானா’, ‘பேமிலி ஸ்டார்’ போன்ற தெலுங்கு படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் மிருணாள் தாகூர். இவர், தற்போது ‘டகோயிட்’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.
அதிவி சேஷ் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தை ஷானியல் டியோ இயக்குகிறார். சுப்ரியா யர்லகடா மற்றும் சுனில் நரங் இணைந்து தயாரிக்கும் இப்படத்தில் இயக்குனரும் நடிகருமான அனுராக் காஷ்யப் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இதன் மூலம் இவர் தெலுங்கில் அறிமுகமாகிறார்.
இந்நிலையில், இப்படத்தின் முக்கிய அப்டேட் வெளியாகி இருக்கிறது. அதன்படி, ‘டகோயிட்’படத்தின் கிளிம்ப்ஸ் வருகிற 26-ம் தேதி காலை 11.07 மணிக்கு வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.