‘மிராய் 2’ – வில்லனாகும் ”பாகுபலி” பட நடிகர்?|Rana Daggubati to play the villain in ‘Mirai 2’

சென்னை,
தேஜா சஜ்ஜா நடித்த ”மிராய்” படம், கடந்த 12 அன்று வெளியாகி நேர்மறையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. ரித்திகா நாயக் கதாநாயகியாக நடித்திருக்கும் இப்படம் இதுவரை ரூ.56 கோடி வசூலித்திருக்கிறது.
இப்படத்தின் முடிவில், 2-ம் பாகத்திற்கான காட்சியும் காட்டப்பட்டுள்ளது. அதற்கு “மிராய்: ஜெய்த்ரயா” என்று பெயரிடப்பட்டுள்ளது. இதில், புதிய வில்லன் அறிமுகமாகிறார். அது ”பாகுபலி” பட நடிகர் ராணா டகுபதி என்று கூறப்படுகிறது. முதல் பாகத்தில் மஞ்சு மனோஜ் வில்லனாக நடித்திருந்தார்.
பாகுபலியில் ராணா டகுபதி பல்வால்தேவனாக நடித்து பாராட்டு பெற்றதை கருத்தில் கொண்டு, இப்படக்குழு இந்த முடிவை எடுத்ததைபோல் தெரிகிறது. விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.