'மிடில் கிளாஸ்' படத்தின் மோஷன் போஸ்டர் வெளியீடு

சென்னை,
‘சூது கவ்வும்’, ‘முண்டாசுப்பட்டி’, ‘ஜிகர்தண்டா’, ‘டார்லிங்-2′, ‘மாநகரம்’, ‘டிடி ரிட்டன்ஸ்’, ‘கேங்கர்ஸ்’ போன்ற பல படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்தவர், முனீஸ்காந்த். நகைச்சுவையில் அசத்தி வந்த முனீஸ்காந்த் தற்போது ‘மிடில் கிளாஸ்’ என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இந்த படத்தினை கிஷோர் இயக்கியுள்ளார். இந்த படத்தினை ஆக்ஸஸ் பிலிம் பேக்டரி தயாரித்துள்ளது. காமெடி கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இந்த நிலையில், பிரபல இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் ‘மிடில் கிளாஸ்’ படத்தின் மோஷன் போஸ்டரை வெளியிட்டு, படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.