மாளவிகா மோகனனுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த "சர்தார் 2" படக்குழு

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் கார்த்தி. கடந்த 2022-ம் ஆண்டு, கார்த்தியின் நடிப்பில் வெளியான படம் ‘சர்தார்’. இதில் அப்பா- மகன் என இரட்டை வேடத்தில் நடித்திருந்தார் கார்த்தி. இந்த படத்தின் வரவேற்பை தொடர்ந்து இரண்டாம் பாகம் தயாராகி வருகிறது. ‘சர்தார் 2’ படத்தில் நடிகர் எஸ்.ஜே. சூர்யா, மாளவிகா மோகனன், ஆஷிகா ரங்கநாத், ரஜிஷா விஜயன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், விரைவில் இப்படம் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், நடிகை மாளவிகா மோகனன் பிறந்தநாளை முன்னிட்டு ‘சர்தார் 2’ படக்குழு அவருக்கு போஸ்டர் வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளது.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான ‘பேட்ட’ படத்தில் நடித்து தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். அதனைத்தொடர்ந்து விஜய்யுடன் ‘மாஸ்டர்’ படத்திலும் நடித்து கலக்கினார். பிரபாஸ் ஜோடியாக ‘தி ராஜாசாப்’ படத்திலும், கார்த்தி ஜோடியாக ‘சர்தார்-2’ படத்திலும் நடித்து முடித்துள்ளார்.மோகன்லாலின் “ஹிருதயப்பூர்வம்” படத்தில் நடித்துவருகிறார்.