மாளவிகா மோகனனின் அடுத்த பாலிவுட் படம்?|Malavika Mohanan bags Bollywood project

சென்னை,
மலையாள திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான நடிகை மாளவிகா மோகனன், தமிழில் ‘பேட்ட’, ‘மாஸ்டர்’ ‘மாறன்’ போன்ற படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். சமீபத்தில் விக்ரம் நடிப்பில் வெளியான தங்கலான் படத்திலும் சித்தாந்த் சதுர்வேதியுடன் ‘யுத்ரா’ படத்திலும் நடித்திருந்தார்.
தற்போது பிரபாஸுடன் ‘தி ராஜா சாப்’ படத்திலும், மோகன்லாலுடன் ‘ஹிருதயபூர்வம்’ படத்திலும் நடித்து வருகிறார். யுத்ரா படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமான இவர், தற்போது மீண்டும் ஒரு பாலிவுட் படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.