மாலத்தீவில் நேரத்தை கழிக்கும் நேஹா ஷெட்டி…அவரது அடுத்த திரைப்படம் எது?|Neha Shetty’s Glam Maldives Vacation Takes Over Social Media

மாலே,
சூப்பர் ஹிட் திரைப்படமான டிஜே தில்லுவில் ‘ராதிகா’ வேடத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை நேஹா ஷெட்டி. கடைசியாக ”கேங்க்ஸ் ஆப் கோதாவரி”யில் நடித்த அவர், தற்போது மாலத்தீவில் நேரத்தை கழித்து வருகிறார்.
இது தொடர்பான புகைப்படங்களும் வீடியோகளும் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன. மேலும், அவரை மீண்டும் திரையில் பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.
”கேங்க்ஸ் ஆப் கோதாவரி”க்குப் பிறகு அவர் எந்த புதிய படங்களிலும் கையெழுத்திடாதநிலையில், அவரது அடுத்த படம் என்ன என்பதை அறிய ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.