மாலத்தீவில் குடும்பத்துடம் பிறந்தநாள் கொண்டாடிய காஜல் அகர்வால்|Kajal Aggarwal celebrates birthday in Maldives with family

மாலத்தீவு,
நட்சத்திர நடிகை காஜல் அகர்வால் கடைசியாக ”சிக்கந்தர்” படத்தில் நடித்திருந்தார். சல்மான் கான் கதாநாயகனாக நடித்த இந்தப் படம் பாக்ஸ் ஆபீஸில் சிறப்பாக செயல்படவில்லை என்றாலும், காஜல் தனது நடிப்பால் தனித்து நின்றார். ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினார்.
கடந்த 19-ம் தேதி காஜல் தனது 40வது பிறந்தநாளைக் கொண்டாடினார். அவருக்கு ரசிகர்கள் மற்றும் சக நடிகர், நடிகைகள் வாழ்த்து தெரிவித்தனர்.
இந்நிலையில், மாலத்தீவில் தனது குடும்பத்தினருடன் பிறந்தநாள் கொண்டாடிய புகைப்படங்களை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படங்கள் இணையத்தில் வேகமாக வைரலாகின.
காஜல் அடுத்ததாக மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கண்ணப்பா படத்தில் நடித்திருக்கிறார். அதில் அவர் பார்வதி தேவியாக நடித்திருக்கிறார். மேலும், கமல்ஹாசனுடன் ”இந்தியன் 3” , ”தி இந்தியா ஸ்டோரி” என்ற இந்தி படமும் அவரது கைவசம் உள்ளது.