மார்வெல் படங்களின் ரிலீஸ் தேதியில் மாற்றம் |Avengers Doomsday And Secret Wars Delayed To December 2026 And 2027

சென்னை,
இந்தியாவில், ஹாலிவுட் படங்களுக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. ஹாலிவுட்டில் மார்வெல், டிசி நிறுவனங்களின் கீழ் பல்வேறு சூப்பர் ஹீரோ படங்கள் உருவாகி வருகின்றன.
அதிலும் குறிப்பாக, மார்வெல் படங்களுக்கு ரசிகர்கள் அதிகம். இதற்கு உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அந்தவகையில், தற்போது மார்வெல் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் ‘தி பென்டாஸ்டிக் போர்: பர்ஸ்ட் ஸ்டெப்ஸ்’ , அவெஞ்சர்ஸ் டூம்ஸ்டே , சீக்ரெட் வார்ஸ், ஸ்பைடர் மேன்: பிராண்ட் நியூ டே உள்ளிட்ட படங்கள் உருவாகி வருகின்றன.
இதில் அடுத்ததாக ‘தி பென்டாஸ்டிக் போர்: பர்ஸ்ட் ஸ்டெப்ஸ்’ படம் ஜூலை 25-ம் தேதி வெளியாக உள்ளது. அதனைத்தொடர்ந்து அடுத்தடுத்த படங்கள் வெளியாக உள்ளன.
இந்நிலையில், அவெஞ்சர்ஸ் டூம்ஸ்டே மற்றும் சீக்ரெட் வார்ஸ் படங்களில் ரிலீசை மார்வெல் நிறுவனம் தள்ளி வைத்திருக்கிறது. அவெஞ்சர்ஸ் டூம்ஸ்டே படத்தை 2026-ம் ஆண்டு டிசம்பர் 18-ம் தேதி ரிலீஸ் பண்ண திட்டமிட்டிருக்கிறார்கள். ஆனால், இப்படம் 2026-ம் ஆண்டு மே 1-ம் தேதி வெளியிட பட இருந்தது.
அதேபோல், அவெஞ்சர் சீக்ரெட் வார்ஸ் 2027-ம் ஆண்டு மே 7 -ம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டநிலையில், அதுவும் தாமதமாக டிசம்பர் 17, 2027-ல் வெளியிட பட உள்ளது. அதுமட்டுமில்லமல், டைட்டில் அறிவிக்கப்படாத பல மார்வெல் படங்களின் ரிலீஸ் தேதியும் மாற்றப்பட்டுள்ளது.