மாதம்பட்டி ரங்கராஜ் ரொமான்ஸ் வீடியோவை வெளியிட்ட ஜாய் கிரிஸில்டா

சென்னை,
பிரபலங்களின் வீட்டு சமையல் என்றாலே அது மாதம்பட்டி ரங்கராஜ் சமையல் தான் என சொல்லும் அளவுக்கு பிரபலமடைந்தவர் ரங்கராஜ். இவர் 2019-ம் ஆண்டு வெளியான ‘மெஹந்தி சர்கஸ்’ என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இந்த படத்தை ராஜு சரவணன் இயக்கியிருந்தார். இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து மாதம்பட்டி ரங்கராஜ் கேசினோ, மிஸ் மேகி, பெண்குயின் போன்ற படங்களிலும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.
தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நடுவராக இருக்கிறார். மாதம்பட்டி ரங்கராஜுக்கு ஏற்கனவே திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். அவரது மனைவி பெயர் ஸ்ருதி. கடந்த சில காலமாகவே மாதம்பட்டி ரங்கராஜ் தனது மனைவியிடம் இருந்து பிரிய போவதாகவும், ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டா என்பவரை காதலித்து வருவதாகவும் கிசுகிசுக்கப்பட்டது.
ஜாய் கிரிஸில்டா, திரை பிரபலங்களுக்கு ஆடை வடிவமைப்பாளராக இருக்கிறார். இவர் ஏற்கனவே திருமணம் ஆனவர். இவர், 2018ம் ஆண்டில் பொன் மகள் வந்தாள் திரைப்படத்தின் இயக்குநர் ஜே.ஜே. பெட்ரிக் என்பவரை திருமணம் செய்தார். 2023ம் ஆண்டு, இவர்கள் பிரிவதாக அறிவித்தனர்.
சமீபத்தில் மாதம்பட்டி ரங்கராஜுக்கும் தனக்கும் திருமணம் ஆன புகைப்படத்தை சில வாரங்களுக்கு முன்பு ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டா வெளியிட்டிருந்தார். திருமண புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்த ஜாய் கிரிஸில்டா 6 மாத கர்ப்பமாக இருப்பதாக பதிவிட்டிருந்தார்.
முதல் மனைவியை விவாகரத்து செய்யாமல் எப்படி இரண்டாவது திருமணம் செய்து கொள்ள முடியும் என்ற விவாதம் இணையத்தில் வைரலானது.சமீபத்தில் மாதம்பட்டி ரங்கராஜ் தனது இன்ஸ்டாகிராமில் இருந்து ஜாய் கிரிஸில்டாவுடன் எடுத்த அனைத்து போட்டோவையும் டெலிட் செய்து விட்டார்.
சமீபத்தில் மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை திருமணம் செய்து கொள்ள மறுக்கிறார் என சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.ஜாய். மேலும் தன்னை சந்திப்பதை தவிர்ப்பதாகவும், திருமணம் செய்து கொள்வது பற்றி கேட்டால் தன்னை அடித்து துன்புறுத்துவதாகவும், தன்னுடன் வாழ விரும்பவில்லை என அவர் சொல்வதாகவும் செய்தியாளர்களிடம் பேட்டி அளித்தார். அதில் “ மாதம்பட்டி ரங்கராஜுடன் நான் பழகும்போது அவருக்கு ஏற்கெனவே திருமணமானது எனக்கு தெரியாது. ஒருகட்டத்தில் எனக்கு தெரியவந்தபோது, ‘முதல் மனைவியை சட்டரீதியாகப் பிரியப் போகிறேன். தற்போது பிரிந்துதான் வாழ்கிறேன்’ என்று கூறினார். பின்னர் 3 ஆண்டுகளுக்கு முன்பு சென்னை எம்.ஆர்.சி. நகரில் உள்ள திருவீதி அம்மன் கோயிலில் என்னை அவர் திருமணம் செய்து கொண்டார். நான் கர்ப்பமும் அடைந்தேன். அப்போது, குழந்தை வேண்டாம், கருக்கலைப்பு செய்து விடு என அவர் வற்புறுத்தினார். நான் மறுத்துவிட்டேன். இந்நிலையில் 2 மாதமாக அவரைத் தொடர்பு கொள்ள முடியவில்லை. 2 வாரத்துக்கு முன்பு அவரைச் சந்தித்தேன். அப்போது ‘உன்னிடம் பேச விரும்பவில்லை’ என்று கூறி, என்னை தாக்கினார். இதனால் அதிர்ச்சி அடைந்தேன். அவர்தான் என் கணவர். என் வயிற்றில் வளரும் குழந்தைக்கு அவர்தான் அப்பா. அவருடன் சேர்ந்து வாழவே நான் விரும்புகிறேன்.இதற்கான சட்டரீதியான நடவடிக்கைகளை காவல்துறை மேற்கொள்ள வேண்டும்.” என்று கூறியுள்ளார். இந்த புகாரில் மாதம்பட்டி ரங்கராஜ் விரைவில் கைது செய்யப்படுவார் எனவும் செய்திகள் வெளியானது.
இந்நிலையில், ஜாய் கிரிஸில்டா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மாதம்பட்டி தனக்கு அனுப்பிய வீடியோவை பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் மாதம்பட்டி ரங்கராஜ், ஓய் பொண்டாட்டி… என்னடி பண்ற பொண்டாட்டி.. ஐ மிஸ் யூ… ஐ ல்வ் யூ பொண்டாட்டி என பேசி உள்ளார். இந்த வீடியோவை ஜாய் பதிவிட்டது இல்லாமல். தன் குழந்தையை சுமந்து கொண்டு இருக்கும் பெண்ணுக்கு துரோகம் செய்யக்கூடிய ஆண் யாரையும் காட்டிக் கொடுப்பான் என பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.