மலையாள எழுத்தாளர் வாசுதேவன் நாயர் காலமானார்

மலையாள எழுத்தாளர் வாசுதேவன் நாயர் காலமானார்


கோழிக்கோடு,

பிரபல மலையாள எழுத்தாளர் எம். டி. வாசுதேவன் நாயர்((91) இதய செயலிழப்பு காரணமாக கோழிக்கோடு பேபி மெமோரியல் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்றிரவு காலமானார். அவரது மறைவுக்கு திரையுலகை சேர்ந்த பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

மலையாள இலக்கியம் மற்றும் திரையுலகில் அழியாத முத்திரை பதித்த எம்.டி.வாசுதேவன் நாயர் பத்ம பூஷண் விருது பெற்றவர். இந்தியாவில் இலக்கியத்துக்காக வழங்கப்படும் உயரிய விருதான ஞானபீடம் விருது கடந்த 1996-ம் ஆண்டு அவருக்கு வழங்கி கவுரவிக்கப்பட்டது. மேலும் சிறந்த திரைக்கதைக்காக 4 தேசிய விருதுகளை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.



admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *