மலையாளத்தில் அறிமுகமாகும் கதிர்

நடிகர் கதிர் மதயானை கூட்டம், பரியேறும் பெருமாள், கிருமி, விக்ரம் வேதா போன்ற படங்களின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். மேலும் விஜயுடன் இணைந்து பிகில் திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவர் சுழல் என்ற வெப் தொடரில் நடித்திருந்தார்.
இந்த நிலையில், மீஷா என்கிற மலையாளப் படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தின் மூலம் மலையாள சினிமாவுக்கும் அறிமுகமாகிறார். எம்சி ஜோசப் இயக்கிய இப்படத்தில் டைம் ஷாம் சாக்கோ, ஆண்டனி வர்கீஸ் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். மீஷா வருகிற ஆகஸ்ட் 1 ம் தேதி வெளியாகிறது. மேலும் ‛ஆர்.டி.எக்ஸ்’ பட இயக்குனர் நகாஷ் ஹிதாயத் இயக்கத்தில் துல்கர் சல்மானின் ‘ஐ ம் கேம்’ எனும் புதிய படத்தில் கதிர் நடித்துள்ளார். இப்படம் விரைவில் திரைக்கு வருகிறது.