மலைப்பாம்பை மயங்க வைத்த பிரியங்கா சோப்ரா| Priyanka Chopra charms python

மலைப்பாம்பை மயங்க வைத்த பிரியங்கா சோப்ரா| Priyanka Chopra charms python


சென்னை,

உலக அழகி பிரியங்கா சோப்ரா விஜய்யின் தமிழன் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். பாலிவுட்டில் இருந்து ஹாலிவுட் வரை தனது அழகினாலும் நடிப்பினாலும் ரசிகர்களை கவர்ந்து வருபவர் பிரியங்கா சோப்ரா. குடும்பத்துடன் லாஸ் ஏஞ்சல்சில் வசித்து வரும் பிரியங்கா சோப்ரா படப்பிடிப்பு மற்றும் குடும்ப நிகழ்ச்சிகளுக்கு மட்டும் இந்தியா வந்து செல்கிறார்.

அடிக்கடி கணவர் நிக் ஜோனாஸ் மற்றும் மகள் மால்டியுடன் பல்வேறு இடங்களுக்கு சுற்றுப்பயணம் செய்து மகிழ்ந்த புகைப்படங்களையும் வீடியோக்களையும் தனது சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்து வரும் பிரியங்கா சோப்ரா சமீபத்தில் லாஸ் ஏஞ்சல்சில் ஒரு மிருக காட்சி சாலைக்கு சென்றுள்ளார்.

தன்னம்பிக்கையும் தைரியமும் கலந்த அழகு சின்னமான பிரியங்கா சோப்ரா மிருக காட்சி சாலையில் உள்ள மலைப்பாம்பை துணிச்சலோடு தோளில் போட்டபடி எந்த பயமும் இன்றி மகிழ்ச்சியோடு அவரது முத்துப்பல் சிரிப்பழகை வெளிப்படுத்தினார்.

அப்போது எடுத்த புகைப்படங்களை வெளியிட்டுள்ள பிரியங்கா சோப்ரா புகைப்படங்களுக்கு பிரியங்கா சோப்ரா என்றாலே உலகமே வியக்கும். ஆனால் அவர் மலைப்பாம்புகளைகூட மயங்க வைத்துள்ளார் என ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து பதிவிட்டு வருகின்றனர். மேலும் முந்தைய காலங்களில் பாம்புகளுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களையும் இதனுடன் அவர் பகிர்ந்துள்ளார். இதற்கு பலரும் லைக்குகளை வாரி இறைத்து வருகின்றனர்.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *