மருத்துவமனையில் மீண்டும் அனுமதிக்கப்பட்ட பொன்னம்பலம்: உருக்கமான ஆடியோ வெளியீடு

மருத்துவமனையில் மீண்டும் அனுமதிக்கப்பட்ட பொன்னம்பலம்: உருக்கமான ஆடியோ வெளியீடு


சென்னை,

தமிழ் திரையுலகில் பிரபல வில்லன் நடிகராக இருப்பவர் பொன்னம்பலம். சண்டை கலைஞரான இவர் 1988-ல் ‘கலியுகம்’ என்ற படத்தில் நடிகராக அறிமுகமானார். ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த் உள்பட முன்னணி நடிகர்கள் படங்களில் வில்லனாக நடித்துள்ளார். கமல் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 2-ல் போட்டியாளராக கலந்து கொண்டார்.

கடந்த 2020-ம் ஆண்டு சீறுநீரக பிரச்சினையின் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பொன்னம்பலம் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு நலமுடன் வீடு திரும்பினார். அப்போது, அவருக்கு தமிழ் திரைப்பிரபலங்கள் பண உதவி செய்தனர்.

தற்போது மீண்டும் உடல்நலக்குறைவு ஏற்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில், மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பொன்னம்பலம் உருக்கமான ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த ஆடியோவில், “மீண்டும் சிறுநீரக தொற்று ஏற்பட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறேன். எனது உடல்நிலை சீராக இன்னும் 2 மாதம் ஆகலாம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். கமல், தனுஷ், ரவி மோகன், சிம்பு என்று எல்லோரும் உதவி செய்தார்கள். அவர்களுக்கு எனது கோடான கோடி நன்றி. எனக்காக அனைவரும் இறைவனிடம் பிரார்த்தனை செய்யுங்கள்” என்று உருக்கமாக பேசியுள்ளார்.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *