”மனுஷி” பட வழக்கு – ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு|”Manushi” film case

சென்னை,
இயக்குனர் வெற்றிமாறன் தயாரித்துள்ள ”மனுஷி” படத்தில் சில காட்சிகளை நீக்குமாறு படக்குழுவுக்கு சென்னை ஐகோர்ட்டு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவிட்டுள்ளார்.
ஆண்ட்ரியா நடிப்பில் உருவான ‘மனுஷி’ படத்தில் இடம்பெற்ற சில காட்சிகளை நீக்கவும், மாற்றி அமைக்கவும், வசனங்களை நீக்கி 2 வாரத்தில் தணிக்கை குழுவுக்கு அனுப்புமாறும் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘மனுஷி’ திரைப்படத்திற்கு தணிக்கை சான்று வழங்க கோரி தயாரிப்பாளர் வெற்றிமாறன் தொடர்ந்த வழக்கில் சென்னை ஐகோர்ட்டு இந்த அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.