மநீம தலைவர் கமல்ஹாசனுக்கு கொலை மிரட்டல் – காவல் துறையில் புகார்

சென்னை,
மக்கள் நீதி மய்யம் தலைவரும் மாநிலங்களவை எம்.பி.,யுமான கமலஹாசனுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் துணைத் தலைவரும் ஓய்வு பெற்ற ஐஜியுமான மவுரியா சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரில் சனாதானத்திற்கு எதிராக பேசிய கமல்ஹாசனுக்கு சின்னத்திரை நடிகர் ரவிச்சந்திரன் என்பவர் கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அகரம் பவுண்டேஷன் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சனாதானத்திற்கு எதிராக கமலஹாசன் பேசியதாக கூறப்படுகிறது. இதற்கு சின்னத்திரை நடிகர் ரவிச்சந்திரன் என்பவர் கமலஹாசனின் கழுத்தை அறுப்போம் என்று மிரட்டல் விடுத்ததாக கூறப்பட்டது. இந்த சூழலில் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் சுமார் 30க்கும் மேற்பட்ட மக்கள் நீதி மய்யம் கட்சி நிர்வாகிகள் சென்னை காவல் ஆணையரை சந்தித்து புகார் அளித்துள்ளனர்.