“மதுரை பொண்ணுபோல பேசி நடிக்க ஆசை” – மனம் திறந்து பேசிய மிருணாளினி. |“I want to talk and act like a Madurai girl”

சென்னை,
சமூக வலைதளங்கள் மூலம் பிரபலமாகி சினிமாவில் நுழைந்தவர் நடிகை மிருணாளினி. தமிழில் விஜய்சேது பதி நடிப்பில் வெளியான சூப்பர் டீலக்ஸ் படத்தின் மூலம் அறிமுகமானார். அதனைத்தொடர்ந்து, எம்.ஜி.ஆர் மகன், கோப்ரா, எனிமி, ரோமியோ உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார்.
இந்நிலையில், மதுரையில் ஒரு நிகழ்வில் நடிகை மிருணாளி`, மதுரை பொண்ணுபோல பேசி நடிக்க ஆசை உள்ளதாக மனது திறந்து பேசினார். இது குறித்து அவர் கூறுகையில்,
‘பொங்கல் நேரத்தில் நான் மதுரை வந்ததே கிடையாது. இங்க ஊரே திருவிழா கோலமாக உள்ளது. எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. மதுரை பொண்ணு மாதிரி பேச ஆசையாக உள்ளது. எனக்கு அவர்கள் பேசுவதுபோல் பேச தெரியாது. ஆனால், வாய்ப்பு கிடைத்தால் அதை கற்றுக்கொண்டு நடிப்பேன். ஆனால், அது எனக்கு சரியாக வரவில்லை என்று யாரும் சொல்லிவிடக்கூடாது, மதுரை பொண்ணு மாதிரி பேசிவிட்டார் என்று சொன்னால் கூட போதும்’என்றார்.