“மதராஸி” படத்தின் முழு ஆல்பம் வெளியானது

“மதராஸி” படத்தின் முழு ஆல்பம் வெளியானது


சென்னை,

தமிழ் சினிமாவில் அனைவராலும் கொண்டாடப்படும் நடிகர் சிவகார்த்திகேயன் பிரபல இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் தனது 23-வது படமான ‘மதராஸி’ திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தில் ருக்மினி வசந்த், விக்ராந்த், வித்யூத் ஜம்வால், பிஜு மேனன், டான்சிங் ரோஸ் சபீர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்த படத்தை ஸ்ரீ லட்சுமி மூவிஸ் நிறுவனம் தயாரிக்க அனிருத் இதற்கு இசை அமைத்திருக்கிறார். இப்படம் வருகிற செப்டம்பர் 5ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. ‘மதராஸி’ படம் படம் வெளியாக இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், சமீபத்தில் டிரெய்லர் வெளியாகி வைரலானது. ‘மதராஸி’ படத்தின் டிரெய்லர் யூடியூபில் பல மொழிகளை சேர்த்து 18 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளை கடந்துள்ளது.

‘மதராஸி’ திரைப்படத்திற்கு சென்சார் போர்டு யு/ஏ சான்றிதழ் வழங்கி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. படத்தின் பாடல்களும் இசை வெளியீட்டு விழாவில் வெளியிடப்பட்டது.

இந்நிலையில், ‘மதராஸி’ படத்தின் முழு ஆல்பம் வெளியிடப்பட்டுள்ளது.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *