‘மதராஸி’ படத்தின் கதையை முதலில் வேறொரு நடிகருக்கு சொன்ன ஏ. ஆர். முருகதாஸ்!

‘மதராஸி’ படத்தின் கதையை முதலில் வேறொரு நடிகருக்கு சொன்ன ஏ. ஆர். முருகதாஸ்!


சென்னை,

பிரபல இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் தனது 23-வது படமான ‘மதராஸி’ என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து ருக்மினி வசந்த், விக்ராந்த், வித்யூத் ஜம்வால், பிஜு மேனன், டான்சிங் ரோஸ் சபீர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தை ஸ்ரீ லட்சுமி மூவிஸ் நிறுவனம் தயாரிக்க அனிருத் இதற்கு இசை அமைத்திருக்கிறார்.

இப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையில் வெளியாகும் என்ற தகவல் கிடைத்து உள்ளது. இந்த நிலையில், மதராஸி படத்தின் கதையை முதலில் வேறொரு நடிகருக்கு சொன்னதாக ஏ.ஆர். முருகதாஸ் சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

அதாவது, “கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் மதராஸி படத்தின் கதையை பாலிவுட் நடிகர் ஷாருக்கானிடம் கூறினேன். ஆனால் அவரிடம் படத்தின் முழு கதையையும் கூறவில்லை. பாதி கதையை கேட்ட ஷாருக்கான் அந்த படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்தார். ஆனால், ஒரு மாதம் கழித்து மீண்டும் இதைப் பற்றி அவரிடம் பேசியபோது ஷாருக்கானிடம் இருந்து எந்த வித பதிலும் வரவில்லை. அதன்பின்னரே, அந்த கதையை விரிவுபடுத்தி சிவகார்த்திகேயனிடம் சொன்னேன். இந்த படத்தில் நடிக்க அவர் ஒப்புக்கொண்டார். மேலும், மதராஸி படத்தில் சிவகார்த்திகேயனுடன் பணியாற்றியது அருமையான அனுபவமாக இருந்தது” என்று தெரிவித்துள்ளார்.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *