மணிகண்டன் நடிக்கும் புதிய படத்தின் அப்டேட்

திரைக்கதை எழுத்தாளரும், நடிகருமான மணிகண்டன் ‘பீட்சா 2’ படம் மூலமாக சினிமாவில் அறிமுகமானார். காலா, ஜெய் பீம், குட் நைட் மற்றும் லவ்வர் ஆகிய படங்களில் இவரது கதாபாத்திரம் பெரியளவில் பேசப்பட்டது. குட் நைட் படத்திற்கு நல்ல வரவேற்பு அளிக்கப்பட்டது. குறட்டையை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்தப் படம் கணவன் மனைவிக்கிடையில் எந்தளவிற்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பதை இந்தப் படம் எடுத்துக்காட்டியது.
விஜய்யின் கோட் படத்தில் ஏஐ தொழில்நுட்பம் மூலமாக உருவாக்கப்பட்ட விஜயகாந்திற்கு இவர்தான் பின்னணி குரல் கொடுத்திருந்தார். இவரது நடிப்பில் குடும்பஸ்தன் படம் வெளியாகி வெற்றிப்படமானது..
இந்நிலையில் பா ரஞ்சித் தயாரிப்பில் மணிகண்டன் நடிக்கும் புதிய படத்திற்கு ‘மக்கள் காவலன்’ என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தை இயக்குநர் பா.ரஞ்சித்தின் உதவி இயக்குநரான சந்தோஷ் குமார் இயக்குகிறார். இப்படம் ஒரு சாதி ரீதியாக நடக்கும் அரசியலை மையப்படுத்தி உருவாக இருக்கிறது. இதுக்குறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.